இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்துக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து
2024-02-04 15:30:41

இலங்கை சுதந்திரம் பெற்ற 76ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், பிப்ரவரி 4ஆம் நாள் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், இலங்கை அரசுத் தலைவர் விக்ராமசிங்கேவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.

இச்செய்தியில் அவர் கூறுகையில்,

சீனாவும் இலங்கையும் மனமார்ந்த ஒன்றுக்கு ஒன்று உதவி அளித்து, பல தலைமுறை நட்புறவைக் கொண்ட நெடுநோக்கு கூட்டாளியாகும். கடந்த சில ஆண்டுகளில் இரு நாட்டுறவு சீராக வளர்ந்து வருகின்றது. சீன-இலங்கை உறவில் நான் உயர்வாக கவனம் செலுத்தி வருகிறேன். விக்ராமசிங்கேவுடன் இணைந்து, பாரம்பரிய நட்புறவைத் தொடர்ந்து முன்னேற்றி, அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி, இரு நாட்டு நெடுநோக்கு கூட்டாளியுறவை முன்னெடுக்க விரும்புகிறேன் என்றார்.

அதே நாள் சீன தலைமை அமைச்சர் லி ச்சியாங்கும் இலங்கை தலைமை அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தார்.