2023ஆம் ஆண்டு சீனாவின் வெளிநாட்டு முதலீடு 2022ஆம் ஆண்டை விட 5.7 சதவீதம் அதிகரிப்பு
2024-02-04 15:11:21

சீன வணிக அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டில் சீனாவின் வெளிநாட்டு முதலீட்டு ஒத்துழைப்பு சீராக வளர்ந்து வந்துள்ளது. அனைத்து தொழில்களிலும் வெளிநாட்டு நேரடி முதலீட்டு தொகை 1 லட்சத்து 4 ஆயிரத்து 185 கோடி யுவானை எட்டி, 2022ஆம் ஆண்டை விட 5.7 சதவீதம் அதிகரித்தது. இதில், நிதி துறை சாரா வெளிநாட்டு நேரடி முதலீட்டு தொகை 91 ஆயிரத்து 699 கோடி யுவானை எட்டி, 2022ஆம் ஆண்டை விட 16.7 சதவீதம் அதிகமாகும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற ஆக்கப்பணியை கூட்டாக கட்டியமைக்கும் நாடுகளில் சீன நிறுவனங்களின் நிதி துறை சாரா நேரடி முதலீட்டு தொகை 22 ஆயிரத்து 409 கோடி யுவானை எட்டி, 2022ஆம் ஆண்டை விட 28.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற ஆக்கப்பணியை கூட்டாக கட்டியமைக்கும் நாடுகளில் பொறுப்பேற்றுள்ள திட்டப்பணிகளில் சீன நிறுவனங்களின் வருமானம் 93 ஆயிரத்து 52 கோடி யுவானை எட்டி, 2022ஆம் ஆண்டை விட 9.8 சதவீதம் அதிகரித்துள்ளது.