© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
உள்ளூர் நேரப்படி ஜனவரி 31ஆம் நாள், அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில், அமெரிக்க செனட் அவையின் நிதி கமிட்டியின் உறுப்பினர் டாம் கோட்டம், டிக்டாக் முதன்மைச் செயல் அலுவலர் ஷொ ச்சொ ஷு shou chew தொடர்ச்சியாக அவமதிக்கும் வகையில் கேள்விகளைக் கேட்டார். இக்கூட்டத்தில் அமெரிக்க செனெட் அவை உறுப்பினர்களின் மோசமான செயல்கள் உலக இணையத்தைப் பயன்படுத்துவோர் கவனத்தை ஈர்த்துள்ளன. சி.ஜி.டி.என் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, சீனா பற்றி பேசும் போது, அமெரிக்காவின் சில செனெட் அவை உறுப்பினர்களின் அவமதிப்பு, தவறான எண்ணம், பாகுபாடு முதலியவை வெளிகாட்டப்பட்டுள்ளன. சீன-அமெரிக்க உறவின் நிதானமான வளர்ச்சிக்கு இது தீங்கு விளைவிக்கும் என்று 90 விழுக்காட்டிற்கும் மேலான இணையத்தைப் பயன்படுத்துவோர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
டிக்டாக் பயன்படுத்தும் போது, அமெரிக்காவின் சில செனெட் அவை உறுப்பினர்கள் பேசும் தகவல் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கண்டறியவில்லை என்று 85.3 விழுக்காட்டு விசாரணைபடுத்தப்பட்டோர் கருத்து தெரிவித்தனர்.
இது வரை, டிக்டாக் அமெரிக்கத் தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தியதாக சான்றுகள் ஏதும் அமெரிக்க அரசு வழங்கவில்லை. இதற்கு மாறாக, குறிப்பிட்ட தொழில் நிறுவனங்கள் மீது காரணமின்றி அழுத்த்த்தை திணித்து வருகிறது. சீனா பற்றிய தொடர்புடைய பிரச்சினைகளைப் பயன்படுத்தி, பதற்றங்களை ஏற்படுத்தி, அமெரிக்காவின் சொந்த அறிவியல் தொழில் நுட்பத்தின் ஏகபோகத் தகுநிலையை அமெரிக்கா நிலைநிறுத்து, வேறு நாடுகளின் இயல்பான வளர்ச்சி உரிமையை பறிப்பது என்பது அமெரிக்காவின் உள்நோக்கமாகும்.