சீன மக்கள் விடுதலை படை வீரர்களுக்கு சீனப் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த ஷி ச்சின்பிங்
2024-02-04 09:38:19

சீன பாரம்பரிய பண்டிகையான வசந்த விழா நெருங்கி வருவதுடன், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், பிப்ரவரி 2ஆம் நாள் தியான்ஜினுக்கான இராணுவ படைகளைப் பார்வையிட்டார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி மற்றும் மத்திய இராணுவ ஆணையம் சார்பில், சீன மக்கள் விடுதலை படை வீரர்கள், ஆயுதம் காவற்துறை வீரர்கள், இராணுவ பொது பணியாளர்கள், இருப்பு படையினர் அனைவருக்கும், அவர் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.