கத்தார் ஆசிய கால்பந்து கோப்பையின் அரையிறுதியில் 4அணிகள் நுழைந்தன
2024-02-04 10:00:36

2023 கத்தார் ஆடவர் ஆசிய கால்பந்து கோப்பையின் காலிறுதிப் போட்டிகள் அனைத்தும் 3ஆம் நாள் நிறைவடைந்தன. ஜோர்டான், தென் கொரியா, ஈரான் மற்றும் கத்தார் அணிகள் முறையே தாஜிக்ஸ்தான், ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் உஸ்பெக்ஸ்தான் அணிகளைத் தோற்கடித்து நடப்பு ஆசிய கோப்பையின் முதல் 4 இடங்களை வகித்துள்ளன.

2 அரை இறுதிப் போட்டிகள் 6, 7ஆம் நாட்களில் நடைபெறவுள்ளன. இறுதிப் போட்டிக்குள் நுழைய ஜோர்டான் அணி, தென் கொரியாவுடனும், ஈரான் அணி, கத்தாருடனும்  போட்டியிடும். மேலும், இறுதிப் போட்டி பிப்ரவரி 10ஆம் நாள் நடைபெறவுள்ளது.