சிரியா மற்றும் ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் குறித்து ஐ.நாவின் மனப்பான்மை
2024-02-04 10:01:04

சிரியா மற்றும் ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது குறித்து, தொடர்புடைய தரப்புகள் பயனுள்ள முறையில் நெருக்கடி நிலைமையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆன்டோனியோ குட்டரேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஐ.நா பொதுச் செயலாளரின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் 3ஆம் தெரிவித்தார்.

இப்பகுதியின் நிலைமை தொடர்ந்து தீவிரமாக்குவதில் ஆன்டோனியோ குட்டரேஸ் கவனம் செலுத்தி வருகின்றார். தொடர்புடைய தரப்புகள் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு, நெருக்கடி நிலைமையைத் தணிவு செய்ய வேண்டும். மேலும், இப்பகுதியில் இந்நெருக்கடியால் பொருளாதாரம் மற்றும் மக்கள் உயிரிழப்பு ஏற்படுவதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்தார்.