சீனா உள்ளிட்ட 5 நாடுகளின் பயணிகள் ரஷியாவின் கவனத்தை ஈர்த்துள்ளனர்
2024-02-04 20:07:53

ரஷிய நெடுநோக்கு ஆய்வு மையத்தின் பொறுப்பாளர் பவல் ஸ்மேலோவ் ரஷிய சர்வதேச கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்துகொண்டு, மற்ற நாடுகளில் ரஷியாவில் சுற்றுலா சந்தைக்கு உள்ளார்ந்த ஆற்றல் பற்றிய ஆவணத்தை அறிமுகப்படுத்தினார். இந்த ஆவணத்தின் படி சீனா, இந்தியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் செளதி அரேபியா ஆகிய நாடுகளின் சுற்றுலாப்பயணிகளை 2024ஆம் ஆண்டில் ஈர்க்க ரஷியா முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.