சிரியா,ஈராக் மீது அமெரிக்காவின் தாக்குதலுக்கு சீனா எதிர்ப்பு
2024-02-05 18:17:31

ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தி வீரர்களைக் கொன்றதற்கு பதிலடியாக, சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள ஆயுதக் குழுக்கள் மீது அமெரிக்க இராணுவத்தினர் பிப்ரவரி 3ஆம் நாள் வான் தாக்குதலை நடத்தினர். அமெரிக்கா தங்களது அரசுரிமை பாதுகாப்பை மீறியதற்கு சிரியா மற்றும் ஈராக் அரசுகள் இரண்டும் குற்றஞ்சாட்டின.

இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் பதில் அளிக்கையில்,

சிரியாவும் ஈராக்கும் இறையாண்மை கொண்ட நாடுகள். ஐ.நா.சாசனத்தை மீறுதல், இதர நாடுகளின் உரிமை பிரதேசம் மற்றும் பாதுகாப்பை ஊறுபடுத்துதல் ஆகிய செயல்களை சீனா எதிர்க்கின்றது என்று தெரிவித்தார்.

மேலும், தற்போது மத்திய கிழக்குப் பகுதியின் நிலைமை மிகவும் சிக்கலானதாகவும் பதற்றமாகவும் உள்ளது. தொடர்புடைய தரப்புகள் சர்வதேச சட்டத்தைப் பின்பற்றி, தெளிவான சிந்தனையில் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, நிலைமை மேலும் தீவிரமாகாமல் தவிர்க்க வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித்தார்.