சீனாவில் புதிய தரமான உற்பத்தித்திறனுக்கான முன்னேற்றம்
2024-02-06 14:33:19

புதிய தரமான உற்பத்தித்திறன் என்பது, தற்போது சீனாவில் பரவி வருகின்ற சூடான சொல்லாகும். 2023ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் வடக்கிழக்கு பகுதியில் ஆய்வுப் பயணம் மேற்கொண்ட போது, இந்தச் சொல்லை முதன்முறையாக முன்வைத்தார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு அண்மையில் நடத்திய கூட்டுப் பயிலரங்கில், புதிய தரமான உற்பத்தித்திறன் குறித்து ஷி ச்சின்பிங் ஆழமாக எடுத்துக்கூறினார்.

புதிய தரமான உற்பத்தித்திறன் என்பதற்கு, 3 அம்சங்கள் உள்ளன. முதலாவதாக, உற்பத்தித்திறன் என்பது, மனிதர்கள் இயற்கையைச் சீர்செய்யும் திறனாகும். இரண்டாவதாக, புத்தாக்கத் தொழில் துறைகளின் மூலம் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும். மூன்றாவதாக, உயர் தொழில் நுட்பம், உயர் பணிப்பயன், உயர் தரம் ஆகியவற்றுக்கு மேலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இது குறித்து, ஷி ச்சின்பிங் 4 முன்மொழிவுகளை வழங்கினார். முதலாவதாக, பாரம்பரிய தொழில் துறைகளைச் சீர்செய்து மேம்படுத்த வேண்டும். இரண்டாவதாக, புதிய தொழில் துறைகளை வளர்க்க வேண்டும். மூன்றாவதாக, எதிர்காலத் தொழில் துறையின் திட்டங்களை வகுக்க வேண்டும். நான்காவதாக, திறமைசாலிகளைப் பயிற்றுவிக்க வேண்டும்.

மேலும், உலகத்தில் போட்டியிடும் திறன் வாய்ந்த திறப்பான புத்தாக்கச் சூழ்நிலையைச் சீனா உருவாக்க வேண்டும். புதிய தரமான உற்பத்தித்திறனை முன்னேற்றுவது, மேலதிக சர்வதேச ஒத்துழைப்புகளைத் தூண்டும் என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.