சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ நோர்வே வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை
2024-02-06 11:00:09

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, நோர்வே வெளியுறவு அமைச்சர் எஸ்பன் பார்ட் எட்டுடன், பிப்ரவரி 5ஆம் நாள் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

2024ஆம் ஆண்டில் சீனாவில் பயணம் செய்த முதல் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர், நோர்வே வெளியுறவு அமைச்சர் எட் ஆவார். நோர்வே சீனாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதையும், இரு நாட்டு உறவுகள் முன்னோக்கி வளர்ந்து வருவதையும் இது காட்டுகிறது என்று வாங் யீ தெரிவித்தார். சீனாவின் வளர்ச்சியை நோர்வே அரசு புறநிலையாகவும், பகுத்தறிவுடனும் அன்புடனும் எதிர்கொள்வது, ஒரே சீனா கொள்கையை கடைபிடிப்பது, சீனாவுடன் நட்பாக இருப்பதை பேணுவது ஆகியவற்றில் சீனா நோர்வேயைப் பாராட்டுகிறது என்று தெரிவித்தார்.

தூதாண்மை உறவு நிறுவிய 70வது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட நடவடிக்கைகளை நன்றாக ஏற்பாடு செய்யவும், இரு நாட்டு உயர்மட்ட பரிமாற்றங்களை வலுப்படுத்தவும், அனைத்து துறைகளிலும் நடைமுறை ஒத்துழைப்பை தொடர்ந்து ஆழப்படுத்தவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.