சீன நாகரிகம் மற்றும் வேறுபட்ட நாகரிகங்கள் இடையே பரிமாற்றம்: வசந்த விழா
2024-02-06 18:52:19

சீனாவின் வசந்த விழாவானது, அமைதி, நல்லிணக்கம் என்ற சீனப் பாரம்பரிய பண்பாட்டு கருத்துக்களை வெளிப்படுத்துவதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் 6ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், வசந்த விழா உலகளவில் மென்மேலும் வரவேற்கப்படுவது, சீன நாகரிகத்துக்கும் வேறுபட்ட நாகரிகங்களுக்கும் பரஸ்பர பரிமாற்றம் மேற்கொள்ளும் பிரதிபலிப்பாகும்.

பல்வேறு நாடுகளின் மக்கள் வசந்த விழா கொண்டு வரும் மகிழ்ச்சியை அனுபவித்து, வசந்தகாலத்தின் நறுமணத்தை உணர்ந்து கொண்டு, கைகோர்த்து இனிமையான எதிர்காலத்தை பெறட்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டில் ஐ.நா.வின் 78-ஆம் பேரவைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் ஒன்றில், வசந்த விழாவை ஐ.நா.வின் விடுமுறை தினமாகப் பட்டியலிடப்பட்டது என்பது குறிப்பிட்டத்தக்கது.