ஈராக் மற்றும் சிரியா மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் அவசரக் கூட்டம்
2024-02-06 20:06:44

ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஜனவரி 28ஆம் நாள் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக ஈராக் மற்றும் சிரியா மீது அமெரிக்க இராணுவப்படை வான் தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த சம்பவம் குறித்து ஐ.நா.பாதுகாப்பவை அவசரக் கூட்டத்தை நடத்தியது.

அரசியல் மற்றும் அமைதி விவகாரத்துக்குப் பொறுப்பேற்றுள்ள ஐ.நா.வின் துணை தலைமைச் செயலாளர் ரோஸ்மேரி டிகார்லோஇக்கூட்டத்தில் கூறுகையில், தொடர்புடைய பல்வேறு தரப்புகள் நீண்டகாலமாக நிலவுகின்ற மோதலுக்கு தீர்வு காணவும், பிராந்திய நிலைமை மேலும் தீவிரமாகாமல் தவிர்க்கவும் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.