சீன ஊடகக் குழுமத்தின் டிராகன் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான பிரச்சாரக் காணொளி வெளிநாடுகளில் வரவேற்பு
2024-02-06 10:17:34

பிப்ரவரி 5ஆம் நாள் முதல், சீன ஊடகக் குழுமத்தின் டிராகன் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான பிரச்சாரக் காணொளி, அமெரிக்கச் சிஎன்என் இணையத்தின் வட அமெரிக்க உள்ளூர் அலைவரிசை, சர்வதேச வட அமெரிக்க அலைவரிசை முதலியவற்றில் பலமுறை ஒளிபரப்ப தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளில் மட்டும், பார்வைகளின் எண்ணிக்கை 4 கோடியே 30 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

இவ்வாண்டின் வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான பிரச்சாரக் காணொளி, சிஎன்எனைச் சேர்ந்த பல தொலைக்காட்சி அலைவரிசைகளில் பிப்ரவரி 18ஆம் நாள் வரை ஒளிபரப்பப்படும். ஏறக்குறைய 40 கோடி வெளிநாட்டுப் பார்வையாளர்கள் இதைக் கண்டு ரசிப்பார்கள் என்று தெரிய வருகின்றது.