நெடுஞ்சாலை போக்குவரத்து உத்தரவாதத்துக்கு அவசர ஒதுக்கீடு
2024-02-06 20:34:05

கடந்த ஜனவரியிலிருந்து, சீனாவின் பல இடங்களில் குறைந்த வெப்பநிலையுடன் மழை, பனி மற்றும் உறைபனி பேரழிவு போன்ற காலநிலை நிலவி வருகின்றது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலையில் பனிப்பொழிவானது 10 முதல் 15சென்டிமீட்டர் வரையில் உள்ளது என்றும், குறிப்பிட்ட பகுதியில் 30சென்டிமீட்டருக்கு மேல் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, தற்போதைய வசந்த விழா போக்குவரத்து சேவைக்கு மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் சூழலில், ஹெபெய், ஷான்சி, ஜியாங் சூ உள்ளிட்ட 11 பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் பனி அகற்றுதல், போக்குவரத்து சேவை உறுதி செய்தல் போன்றவற்றுக்காக, சீன நிதி அமைச்சகமும் போக்குவரத்து அமைச்சகமும் 6ஆம் நாள் 14கோடியே 10இலட்சம் யுவான் அவசர நிதித் தொகையை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளன.