சீனாவின் பல்வேறு மாநிலங்களின் 2023ஆம் ஆண்டின் பொருளாதார அதிகரிப்பு
2024-02-06 14:56:24

தற்போது, சீனாவின் 31 மாநிலங்கள் 2023ஆம் ஆண்டு பொருளாதார அதிகரிப்பு தரவுகளை வெளியிட்டுள்ளன. இதில், 17 மாநிலங்களின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு அதிகரிப்பு விகிதம், சீன தேசிய சராசரியான 5.2 விழுக்காட்டு விகிதத்தை விட அதிகம். பல்வேறு பிரதேசங்களில் மக்கள் பேரவைப் பிரதிநிதி கூட்டத்தொடர் மற்றும் அரசியல் கலந்தாய்வு மாநாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, 20க்கும் மேலான மாநிலங்கள் 2024ஆம் ஆண்டில் ஜி.டி.பி அதிகரிப்பு விகிதம் 5 விழுக்காட்டைத் தாண்டும் இலக்குகளை வகுத்துள்ளன.

சீனாவின் பல்வேறு பகுதிகளின் மொத்த பொருளாதார அளவை பொருத்தவரை, 2023ஆம் ஆண்டில், குவாங்டோங் மாநிலம், 13 இலட்சம் கோடி யுவானைத் தாண்டி, முதலிடம் வகித்துள்ளது. ஜியாங்சு மாநிலம் 2ஆவது இடம் வகித்து, 12 இலட்சத்து 82 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது.

ஆக்கத் தொழில் துறையின் மேம்பாடு, புத்திசாலித்தன மயமாக்கம், பசுமைமயமாக்கம் முதலியவற்றை சீனாவின் பல்வேறு பிரதேசங்கள் தொடர்ந்து முன்னேற்றி வருகின்றன.