15 ஆயிரம் டன் முந்திரி இறக்குமதி – இலங்கை
2024-02-07 19:18:29

இலங்கைக்கு இவ்வாண்டில் 15 ஆயிரம் டன் முந்திரிப் பருப்பு இறக்குமதி செய்வது தொடர்பான முன்மொழிவுக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஓராண்டுக்கான முந்திரிப் பருப்பின் தேவை 25 ஆயிரம் டன், ஆனால் இவ்வாண்டில் 12.5 ஆயிரம் டன் முந்திரி மட்டுமே உள்நாட்டில் கொள்முதல் செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டு முந்திரிப் பருப்புசார் துறை துரதிருஷ்டமான நிலையை எதிர்கொண்டுள்ளது. கடந்த வேளாண் பருவத்தில் முந்திரி பயிர் வேளாண்மை எதிர்பார்த்த அளவுக்கு மேற்கொள்ளப்படவில்லை என்றும் தகவல் துறை தெரிவித்துள்ளது.