அமெரிக்க அரசுக்கும் டெக்சாஸ் அரசுக்கும் இடையே முரண்பாடு
2024-02-07 20:08:17

குடியேற்ற விவகாரத்தில் அமெரிக்க அரசுக்கும், டெக்சாஸ் மாநில அரசுக்கும் இடையே கடுமையான முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை, தேசிய விவாகரத்து என்றுகூட சிலர் விமர்சிக்கின்றனர்.

இது குறித்து சீனாவின் சிஜிடிஎன் ஊடகம் நடத்திய உலகளாவிய கருத்துக் கணிப்பில், அமெரிக்காவில் இரு கட்சியினரிடையேயான பகைமை தீவிரமாகியுள்ளது என்றும் அரசியல் ஒழுங்கற்ற நிலையை நோக்கிச் சென்று கொண்டுள்ளது என்று 86.5 விழுக்காட்டினர் கூறியுள்ளனர்.

சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறுபவர்கள் தொடர்பான குழப்பமான அரசமைப்புச் சட்டம் மற்றும் பிற கட்டமைப்புக் காரணங்களால் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரப் போராட்டத்தை தீவிரமாக்குவதாக 90.3 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.

குடியேற்ற விவகாரம் என்பது, அமெரிக்காவின் குழப்பமான அரசியலில் ஒரு சிறு பகுதி மட்டுமே என்றும் அமெரிக்காவுக்கு எதிராக அமெரிக்காவே உள்ளது என்றும் 89.3 விழுக்காட்டினர் கூறியுள்ளனர்.