சீன மற்றும் அமெரிக்கத் துணை வணிக அமைச்சர்களின் தொடர்பு
2024-02-07 10:50:20

பிப்ரவரி 6ஆம் நாள் சீன வணிக அமைச்சகத்தின் சர்வதேச வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கான பிரதிநிதியும் துணை அமைச்சருமான வாங் ஷு வென், அமெரிக்க துணை வணிக அமைச்சர் மரிசா லாகோ ஆகியோர் காணொளி மூலம் தொடர்புகொண்டு, சீன-அமெரிக்க வணிக வர்த்தகச் செயற்குழுவின் முதல் துணை அமைச்சர் நிலை கூட்டத்திற்கான ஆயத்தப் பணி, ஒன்றுக்கு ஒன்று அக்கறைக் கொண்ட பொருளாதார மற்றும் வர்த்தக பிரச்சினைகள் ஆகியவை குறித்து வெளிப்படையான மற்றும் ஆழமான தொடர்புகளை நடத்தினார்.

சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு, இரு நாட்டு உறவின் நிதானச் சக்தியாகும். அமெரிக்காவுடன் இணைந்து இரு நாட்டு அரசுத் தலைவர்கள் சான் பிரான்சிஸ்கோ பேச்சுவார்த்தையில் எட்டியுள்ள முக்கிய ஒத்த கருத்துக்களை உணர்ச்சிப்பூர்வமாக நடைமுறைப்படுத்தி, ஒத்துழைப்பை விரிவுபடுத்தி, கருத்து வேற்றுமைகளைக் கட்டுப்படுத்தி, இரு நாடுகளின் தொழிற்துறை மற்றும் வணிக வட்டங்களுக்கு இடையிலான ஒத்துழைப்புக்குச் சாதகமான நிலைமைகளை உருவாக்க சீனா விரும்புகின்றது என்று வாங் ஷு வென் தெரிவித்தார்.