சீன-அமெரிக்கப் பொருளாதாரப் பணிக்குழுக்களின் 3ஆவது கூட்டம்
2024-02-07 20:11:10

சீன மற்றும் அமெரிக்கப் பொருளாதாரப் பணிக்குழுக்களின் 3ஆவது கூட்டம் பிப்ரவரி 5, 6ஆகிய இரு நாட்கள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இரு நாட்டுப் பொருளாதாரத் துறை தொடர்பான வாரியங்களின் அதிகாரிகள் இதில் பங்கெடுத்தனர்.

இரு நாட்டு ஒட்டுமொத்த பொருளாதார நிலைமை மற்றும் கொள்கைகள், 20 நாடுகள் குழுவின் நிதி மற்றும் நாணய ஒத்துழைப்பு, வளரும் நாடுகளின் கடன், தொழில்துறை சார் கொள்கை முதலியவை குறித்து இரு தரப்பும் ஆழந்த முறையில் பரிமாற்றம் மேற்கொண்டன.

தவிர, சீனா மீது அமெரிக்கா கூடுதல் சுங்க வரி விதித்தல், இரு வழி முதலீட்டுக்கான கட்டுப்பாடு, சீனத் தொழில் நிறுவனங்களுக்கு தடை விதித்தல் போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதாக சீனா தெரிவித்துள்ளது. இரு தரப்புக்கிடையேயான தொடர்பை நிலைநிறுத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.