சீனாவின் வசந்த விழாவுக்கு ஐ.நா பொதுச் செயலாளரின் வாழ்த்து
2024-02-07 09:52:37

உள்ளூர் நேரப்படி, பிப்ரவரி 6ஆம் நாள், ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரேஸ் காணொளி வழியாக சீனாவின் பாரம்பரிய வசந்த விழாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறுகையில்,

டிராகன் ஆண்டின் வருகைக்கு, அனைவருக்கும் அன்பு வாழ்த்து தெரிவிக்கின்றேன். சந்திர நாட்காட்டின் படி சீனாவின் புத்தாண்டான வசந்த விழா, இவ்வாண்டு ஐ.நாவின் கொண்டாட்ட விழா நாட்காட்டியில் முதன்முறையாக சேர்க்கப்பட்டது. ஐ.நா, பல தரப்புவாதம் மற்றும் உலக முன்னேற்றங்கள் முதலியவற்றுக்கு சீனா மற்றும் சீன மக்கள் ஊன்றி நின்று வருவதற்கு நன்றி தெரிவிக்கின்றேன். கைகோர்த்து முயற்சிப்பதால், தொடர்ச்சியான, நியாயமான மற்றும் அமைதியான எதிர்காலத்தை நனவாக்கலாம். புத்தாண்டில் உடல் நலம், இன்பமான வாழ்க்கை, செழுமை மற்றும் மேம்பாடு பெற வேண்டும் என்று அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.