சீன-சுவிட்சர்லாந்து வெளியுறவு அமைச்சர் நிலை பேச்சுவார்த்தை நடைபெற்றது
2024-02-07 18:03:37

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, சுவிட்சர்லாந்து வெளியுறவு அமைச்சர் இக்னாசியோ காசிஸ்ஆகியோரின் தலைமையில், சீனாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையேயான வெளியுறவு அமைச்சர் நிலையிலான 3ஆவது சுற்று நெடுநோக்கு பேச்சுவார்த்தை பிப்ரவரி 7ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.

சீன-சுவிட்சர்லாந்து தாராள வர்த்தக ஒப்பந்த்த்தை மேம்படுத்துவது பற்றிய பேச்சுவார்த்தையை வெகுவிரைவில் தொடங்க இரு தரப்பும் ஒப்புகொண்டுள்ளன.

வாங்யீ கூறுகையில், சுவிட்சர்லாந்து சீனத் தொழில் நிறுவனங்களுக்கு திறப்பு, நியாயம் மற்றும் பாகுபாடற்ற வணிகச் சூழலை வழங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

சீனாவின் திறந்த மனப்பான்மைக்கு பாராட்டு தெரிவித்த காசிஸ், சுவிட்சர்லாந்து தாராள வர்த்தகத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து, பாதுகாப்புவாதத்தை எதிர்த்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், சுவிட்சர்லாந்துக்குச் செல்லும் சீன மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு விசா துறையில் அதிக அளவு வசதி வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.