வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான பரவல் நடவடிக்கையின் மூலம் உலகளவில் வரவேற்பு
2024-02-08 15:25:46

அமெரிக்கா, கென்யா, ஸ்விட்சர்லாந்து, தென்னாப்பிரிக்கா, ரஷியா, கசகஸ்தான், பிரேசில், அர்ஜென்டீனா, உருகுவே, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், எத்தியோப்பியா, தாய்லாந்து, இந்தோனேசியா, லாவோஸ், கம்போடியா முதலிய நாடுகளில், வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான பரவல் நடவடிக்கைகளை சீன ஊடகக் குழுமம் மேற்கொண்டுள்ளது. வசந்த விழாவின் பண்பாடு என்ற பாலத்தின் மூலம், சர்வதேச மக்கள் மற்றும் நாகரிகப் பரிமாற்றம் முன்னேற்றப்படுகிறது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணைத் தலைவரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான சென் கைய் சியொங் காணொளி வழியாக, இது குறித்து கூறுகையில்,

வசந்த விழா கலை நிகழ்ச்சி 41 ஆண்டுகள் வரலாறுடையது. சீனாவை புரிந்துகொள்ளும் பண்பாட்டுச் சின்னமாக இது மாறியுள்ளது. இவ்வாண்டில், 68 வகை மொழிகள் மற்றும் சி.ஜி.டி.என். பல்லூடகம் போன்ற மேம்பாடுகளின் மூலம், உலகளவில் வசந்த விழா கலை நிகழ்ச்சியை சீன ஊடகக் குழுமம் பரவல் செய்யும். வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான தொலைகாட்சி நிலையங்களின் மூலம் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும். சீனாவின் வசந்த விழா, சீன பாரம்பரிய பண்பாட்டு உள்ளிட்ட தனிச்சிறப்புகளை உலகளவில் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் ரசிக்கலாம் என்று தெரிவித்தார்.