ஃபுகுஷிமாவில் கதிர்வீச்சு நீர் மீண்டும் வெளியேற்றப்பட்ட விபத்து
2024-02-08 20:31:28

ஃபுகுஷிமாவின் முதலாவது அணு மின் நிலையத்தில் கதிர்வீச்சு நீரை தூய்மைப்படுத்தும் சாதனத்தில் கசிவு ஏற்பட்டது காரணமாக, கடந்த சில நாட்களில் சுமார் 5.5டன் கதிர்வீச்சு நீர் வெளியேற்றப்பட்டதாக டோக்கியோ மின்னாற்றல் நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், இந்த விபத்து குறித்து சீனத் தரப்பு மதிப்பீடு செய்து வருகிறது. டோக்கியோ மின்னாற்றல் நிறுவனத்துக்கு நிர்வாகத் துறையில் குழப்பம் மற்றும் ஒழுக்கமின்மை போன்ற பிரச்சினைகள் உள்ளதை இந்த விபத்து மீண்டும் காட்டுகின்றது. ஜப்பானுக்கு காலதாமதமின்றி பன்முகங்களிலும் வெளிப்படையாக இந்த விபத்து பற்றிய விவரங்களை வெளியிடும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், நீண்டகால மற்றும் பயனுள்ள சர்வதேசக் கண்காணிப்பு ஏற்பாடுகளை நிறுவுவது அவசியமாகவும் முக்கியத்துவமாகவும் உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.