பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் தொடக்கம்
2024-02-08 19:28:45

பாகிஸ்தான் பொதுத் தேர்தல் பிப்ரவரி 8ஆம் நாள் காலை 8மணிக்கு தொடங்கியது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், 265இடங்களுக்கு உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, 12கோடியே 80இலட்சம் மேலானோர் இந்தத் தேர்தலில் வாக்களிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் 90ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. இத்தேர்தலில் சுமார் 5100 பேர் போட்டியிடுகின்றனர்.

தற்போது பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை பதற்றமாக இருப்பதன் காரணமாக, அந்நாட்டு பாதுகாப்பு வாரியங்கள் பல்வேறு இடங்களில் சுமார் 5இலட்சம் பாதுகாப்புப் பணியாளர்களை பணி அமர்த்தியுள்ளன.