நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் உதவியுடன் சுங்கக் கட்டணம் வசூல்– இந்தியா திட்டம்
2024-02-08 19:27:22

இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் சார்ந்தியங்கும் ஜிபிஎஸ் வழிமுறையைப் பயன்படுத்தி சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் முறை நடைமுறைக்கு வர உள்ளது.

இது குறித்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் புதன்கிழமை கூறுகையில், புதிய சுங்கக் கட்டண வசூல் முறை இவ்வாண்டின் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார்.

இப்புதிய முறையின்படி, வாகன எண்ணின் மூலம் பயனாளரின் வங்கிக் கணக்கிலிருந்து சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படும். இதன்மூலம், சுங்கச் சாவடிகளின் தேவையில்லை என்பதோடு நெடுஞ்சாலைப் பயணமும் எளிமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.