200 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் சீன வசந்த விழா கலைநிகழ்ச்சி ஒளிபரப்பு
2024-02-08 21:25:35

பிப்ரவரி 9ஆம் நாள் இரவு 8மணிக்கு, சீன ஊடகக் குழுமத்தின் 2024ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சி உலக ரசிகர்களுக்கு வழங்கப்பட உள்ளது. கின்னஸ் உலக சாதனைகளால் அங்கீகரிக்கப்பட்ட உலகில் மிகவும் அதிகமாக பார்க்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியான வசந்த விழா கலை நிகழ்ச்சியானது, உலகில் உள்ள சீனர்கள் கூட்டாக வசந்த விழாவைக் கொண்டாடும் பண்பாட்டு விருந்தாக மாறியுள்ளது. இது, உலகில் சீனப் பண்பாட்டை அறிந்து கொள்ளும் ஜன்னலாக திகழ்கின்றது.

உலகெங்கிலும் உள்ள 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 2100க்கும் மேற்பட்ட ஊடகங்கள், வசந்த விழா கலைநிகழ்ச்சியை நேரலையில் ஒளிபரப்ப உள்ளன. 49 நாடுகளைச் சேர்ந்த 90 நகரங்களில் உள்ள 3000க்கும் மேற்பட்ட பொது பெரிய திரைகளில், இந்த நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பப்படும். இதன்மூலம் உலகெங்கிலும் உள்ள மக்கள் சீன வசந்த விழா மற்றும் சீனப் பண்பாட்டின் தனித்துவமான அழகை பகிர்ந்து கொள்ள முடியும்.