ஈராக்கின் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்:அமெரிக்கா
2024-02-08 10:35:42

ஈராக்கிலுள்ள கட்டாயிப் ஹெஸ்புல்லா ஆயுதக்குழு மீது ஆளில்லா விமானத் தாக்குதலை அமெரிக்கப் படை 7ஆம் நாளிரவு நடத்தியது. இதில், "அமெரிக்க இராணுவத் தளத்தைத் தாக்க திட்டமிட்ட பொறுப்பாளர்" கொல்லப்பட்டார். இத்தாக்குதல், ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் தாக்கப்பட்டு, உயிரிழப்பு ஏற்பட்டதற்கு எதிரான "பழிவாங்கல் நடவடிக்கையாகும்" என்று அதே நாள் அமெரிக்காவின் சென்ட்ரல் கமாண்ட் வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியது.

அமெரிக்க இராணுவம் நடத்திய இந்த தாக்குதல், அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனால் அங்கீகரிக்கப்பட்ட பழிவாங்கல் நோக்கில்  தொடர் நடவடிக்கையின் முடிவாக இருக்காது. மேலதிக நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவரின் கூற்றை மேற்கோள் காட்டி, அமெரிக்காவின் சி.என்.என். தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.