2024ஆம் ஆண்டு சீன வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் ஐந்து ஒத்திகைகள் நிறைவு
2024-02-08 09:48:48

பிப்ரவரி 7ஆம் நாள், சீனா ஊடகக் குழுமம் 2024ஆம் ஆண்டு சீன வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் ஐந்தாவது ஒத்திகையை நிறைவேற்றியது. பாடல்கள், நடனங்கள், குறுக்கு பேச்சுகள், நாடகங்கள், தற்காப்புக் கலைகள், மந்திரத் தந்திர நிகழ்ச்சிகள், கூத்து கலைகள் முதலிய பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் சீராக நிகழ்த்தப்பட்டன. மைய அரங்கம், நான்கு பிரிவு அரங்கங்களுடன் நன்றாக ஒருங்கிணைந்து, மகிழ்ச்சி மிக்க சூழ்நிலையை காட்டியுள்ளது. இதுவரை, சீன வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சி தயாராக உள்ளது. இந்த கலாச்சார விருந்தில் பங்கேற்க உலகில் உள்ள சீன மக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.