வசந்த விழாவுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
2024-02-08 17:13:54

சீனக்கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியும் அரசவையும் 8ஆம் நாள் காலை மக்கள் மாமண்டபத்தில் 2024ஆம் ஆண்டு வசந்த விழா விருந்து நடத்தின. இதில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும் அரசுத்தலைவருமான ஷிச்சின்பிங் உரை நிகழ்த்தினார். பல்வேறு தேசிய இன மக்கள், ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் சகநாட்டவர்கள், மக்காவ் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் சகநாட்டவர்கள், தைவானின் சகநாட்டவர்கள், கடல்கடந்து வாழும் சீனர்கள் ஆகியோருக்கு வசந்த விழா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.