நியூயார்கில் வசந்த விழா கலை நிகழ்ச்சியின் பரவல் நிகழ்வு
2024-02-09 15:14:43

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிப்ரவரி 8ஆம் நாள் நடைபெற்ற தேசிய ஹாக்கி போட்டியில், வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான பரவல் நிகழ்வை சீன ஊடகக் குழுமம் நடத்தியது. 10 ஆயிரத்துக்கும் மேலான பார்வையாளர்கள் கோலாகலமான சூழ்நிலையில், சீனாவின் வசந்த விழா பற்றிய பண்பாட்டு ஈர்ப்பு ஆற்றலை உணர்ந்து, டிராகன் ஆண்டைக் கூட்டாக வரவேற்றனர்.

சீன ஊடகக் குழுமத்தின் பொது இயக்குநர் ஷென் ஹாய்சியொங் காணொளி வழியாக உரை நிகழ்த்தி, சீன ஊடகக் குழுமத்தின் சார்பில், பார்வையாளர்களுக்கு வசந்த விழா வாழ்த்துகளைத் தெரிவித்தார்.