2023ஆம் ஆண்டில் சீன உள்நாட்டு பயணச் செலவு 4.91 டிரில்லியன் யுவான்
2024-02-09 20:25:29

சீனப் பண்பாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில், 2023ஆம் ஆண்டில் சீனாவின் உள்நாட்டு சுற்றுலா பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டன.

புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 489கோடியே 10இலட்சத்தை எட்டியது. இது, 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 93.3விழுக்காடு அதிகமாகும். மேலும், 2023ஆம் ஆண்டில் உள்நாட்டு பயணிகள் பயணத்துக்காக மொத்தமாக 49கோடியே 10இலட்சம் யுவான் செலவிட்டனர். இது, 2022ஆம் ஆண்டை விட 140.3விழுக்காடு அதிகமாகும்.