சிஅன் நகரில் வசந்த விழாவுக்கான விளக்கு நிகழ்ச்சி
2024-02-09 10:15:28

வசந்த விழாவைக் கொண்டாடும் வகையில், சீனாவின் ஷிஅன் நகரத்தின் பழைய சுவர் பகுதியில், சிறப்பான விளக்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இவ்வாண்டின் விளக்கு நிகழ்ச்சியில், பண்பாடு, தொழில்நுட்பம், எண்ணியல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கலை ஆகிய 5 அம்சங்கள் காணப்பட்டன. 4 காட்சிப் பகுதிகளில், டிராகன் ஆண்டின் தனிச்சிறப்புடைய 20 விளக்கு தொகுதிகள், வசந்த விழாவிற்குரிய கோலாகலமான சூழ்நிலையை வழங்கின.