ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் மீண்டும் கசிவு
2024-02-09 10:44:20

7ஆம் நாள் ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் அணுக் கழிவு நீர் கசிவு விபத்து ஏற்பட்டது. அது மனிதர்களால் ஏற்பட்ட பிழையாக இருக்க கூடும் என்று ஜப்பானின் டோக்கியோ மின்சார நிறுவனம் 8ஆம் நாள் அறிவித்தது.

உள்ளூர் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, இவ்விபத்தில் சுமார் 5.5டன் எடையுள்ள அணுக் கழிவு நீர் கசிந்துள்ளது. இக்கசிவு நீரில் உள்ள கத்தியக்க பொருட்களின் அளவு 2200கோடி பெக்கோரல்லை எட்ட மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுசூழலுக்கும் மனிதகுலத்துக்கும் குறிப்பிட்ட அளவிலான பாதிப்பு ஏற்படக் கூடும்.

டோக்கியோ மின்சார நிறுவனத்தில் மீண்டும் விபத்து ஏற்படுவது எதிர்பாராத சம்பவம் அல்ல. 2011ஆம் ஆண்டு ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது முதல் இதுவரை இந்நிறுவனத்தில் பல்வேறு விபத்துகளும் நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன. ஜப்பான் அணுக்கழிவு நீரை கடலுக்கு வெளியேற்றுவதற்கு மிகப் பெரிய பாதுகாப்பு இடர்ப்பாடு உள்ளதாக மக்கள் ஐயப்படுவதற்குப் பின்னால் பல காரணங்கள் உண்டு. இது தொடர்பில் வெளியுலகத்தின் 3 முக்கிய கருத்துக்கள் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

முதலாவது, அணுக் கழிவு நீர் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதை டோக்கியோ மின்சார நிறுவனம் உறுதிப்படுத்த முடியாது. இரண்டாவது, ஜப்பான் அரசின் கண்காணிப்பில் குறைபாடுகள் உள்ளன. டோக்கியோ மின்சார நிறுவனத்துக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையே சிக்கலான லாப தொடர்பு உண்டு. இதனால் ஜப்பான் அரசு நியாயமான கண்காணிப்புப் பங்களிப்பை ஆற்ற முடியாது என்று ஜப்பானிய அறிஞர்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மூன்றாவது, ஜப்பானின் அணுக்கழிவு நீர் சமாளிப்புக்கான கண்காணிப்பில் சர்வதேசச் சமூகம் கலந்து கொள்வது அவசியமாகும். கடலுக்குள் பெருமளவிலான அணுக்கழிவு நீரை வெளியேற்றுவது மனிதகுலத்தின் கூட்டு நலனுடன் தொடர்புடையது. இது, ஜப்பானின் சொந்த விவகாரம் இல்லை. அணுக் கழிவு நீரின் தூய்மையாக்க சாதனங்கள் மற்றும் வெளியேற்ற வசதிகள் பயனுள்ள முறையில் நீண்டகாலமாகவும் நிதானமாகவும் இயங்கும் என்பதை ஜப்பான் அரசும் டோக்கியோ மின்சார நிறுவனமும் முற்றிலும் உறுதிப்படுத்த முடியாது என்று தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் விபத்துகள் நிரூபித்துள்ளன. சர்வதேசச் சமூகம் பன்முகக் கண்காணிப்பை மேற்கொள்வதற்கு இவை போன்ற பல காரணங்கள் இருக்கின்றன.