திபெத்தின மக்கள் திபெத் நாட்காட்டியின் படி புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர்
2024-02-09 20:57:54

திபெத்தின நாட்காட்டியின் புத்தாண்டுடன், வசந்த விழாவும் வந்துள்ள சூழலில், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பல்வேறு இன மக்கள் மகிழ்ச்சியான விழா சூழலில் மூழ்கியுள்ளனர். திபெத்தின நாட்காட்டியின் படி 12ஆவது மாதத்தின் 29ஆம் நாளிரவில் திபெத்தின மக்கள் “குது” என்னும் உணவைச் சாப்பிடுவார்கள். இன்றிரவு குது இரவு என்று அழைக்கப்படுகின்றது. குது சாப்பிட்டப்பிறகு, பார்லி சோளத்தட்டைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தீபத்தை ஏற்றி இறை வேண்டல் செய்து புத்தாண்டை வரவேற்பது வழக்கமாக உள்ளது.