சீனப் புத்தாண்டுக்குச் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் வாழ்த்து
2024-02-09 10:04:45

சந்திர நாட்காட்டியின் டிராகன் ஆண்டை முன்னிட்டு, வெளிநாடு மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், தொலைபேசி, கடிதம் முதலிய வழிகளில் சீன அரசுத் தலைவருக்கும் சீன மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இது பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் 8ஆம் நாள் கூறுகையில், வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் வாழ்த்துகளுக்குச் சீனா உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், சர்வதேசச் சமூகத்துடன் இணைந்து, மனித குலத்துக்கான பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றி, மேலும் அருமையான உலகத்தைக் கட்டியமைக்கச் சீனா விரும்புகின்றது என்று தெரிவித்தார்.