வேட் வரி அதிகரிப்பால் இலங்கையில் வருவாய் 25% அதிகரிப்பு
2024-02-09 19:13:54

இலங்கையில் மதிப்புக் கூடுதல் வரி அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரியிலான வருவாய் 25 விழுக்காடு அதிகரித்ததாக அந்நாட்டு நிதி இணை அமைச்சர் ரஞ்சித் சியாமபாலபாட்டியா வியாழக்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் அவர் கூறுகையில், ஜனவரியில் 21900 கோடி ரூபாய் வருவாய் எதிர்பார்க்கப்பட்டதாகவும், ஆனால் 27400 கோடி ரூபாய் வருவாய் அரசு ஈட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதில், சுங்கத் துறை 12100 கோடி ரூபாய், வரித் துறை 3900 கோடி ரூபாய் மற்றும் உள்நாட்டு வருவாய் துறை 11400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், ஜனவரியில் பணவீக்க விகிதம் 6.4 விழுக்காடாகப் பதிவாகியது என்றும் அவர் கூறினார்.