2024ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் மிக வெப்பமான மாதம்
2024-02-10 17:07:08

2024ஆம் ஆண்டு ஜனவரி திங்கள், உலக பதிவில் மிக வெப்பமான மாதம் ஆகும் என்று உலக வானிலை அமைப்பு 9ஆம் நாள் ஐரோப்பிய ஒன்றிய காலநிலைக் கண்காணிப்பு சேவையான கோப்பர்நிகஸ் வெளிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி தெரிவித்தது.

தொடர்ந்து 8ஆவது மாதத்தில் வரலாற்றின் அதே காலத்தில் மிக உயர்ந்த வெப்பப் பதிவு இதுவாகும். கடல் பரப்பு வெப்பமும் தொடர்ந்து வரலாற்றில் மிக உயர்ந்த பதிவை எட்டுகிறது என்று உலக வானிலை அமைப்பு தெரிவித்தது.

கோப்பர்நிகஸ் வெளிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் ஜனவரி திங்கள், பூமியின் மேற்பரப்பு வெப்பம், 1850 முதல் 1900ஆம் ஆண்டு வரை அதே காலத்தில் உள்ள சராசரி வெப்பத்தை விட 1.66 டிகரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.

இவ்வாண்டின் ஜனவரி திங்கள் வெப்பம், 1991 முதல் 2020ஆம் ஆண்டு வரையான அதே காலத்தில் உள்ள சராசரி வெப்பத்தை விட 0.7 டிகரி செல்சியஸ் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.