அமைதியை நனவாக்குவது பற்றிய ஐ.நா தலைமைச் செயலாளரின் வேண்டுகோள்
2024-02-10 16:43:21

சர்வதேச சமூகம் ஒற்றுமையுடன், அமைதியை நனவாக்கி, மனித குலம் சந்தித்த இன்னல்கள் மற்றும் அறைகூவல்களுக்கு தீர்வு வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் என்று ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரேஸ் 8ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், ஐ.நா சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்துக்குப் பொருந்திய நியாயமான மற்றும் தொடரவல்ல அமைதியை நனவாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தவிரவும், மோதல்களை நிறுத்துதல், செயற்கை நுண்ணறிவு பற்றிய தெரியாத இடர்ப்பாடுகளைச் சமாளித்தல், காலநிலை குறித்து நடவடிக்கை மேற்கொள்தல், தொடரவல்ல வளர்ச்சி இலக்கை நனவாக்குதல் ஆகியவற்றுக்கு சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.