ஆண்டுக்கு குறிப்பிட்ட வருமானமுடைய பண்பாட்டு நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பு
2024-02-10 16:54:23

சீனத் தேசிய புள்ளி விவரப் பணியகம் அண்மையில் வெளியிட்ட தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டு, ஆண்டுக்கு குறிப்பிட்ட வருமானமுடைய பண்பாட்டு நிறுவனங்களின் லாபம், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 660 கோடி யுவானை எட்டியுள்ளது. இது 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 30.9 விழுக்காடு அதிகரித்தது. இந்நிறுவனங்களின் வருமானத்தில் லாபம் வகிக்கும் விகிதாசாரம், 8.93 விழுக்காடாகும். இது 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 1.55 சதவீதப் புள்ளிகள் அதிகரித்தது.

புள்ளி விவரங்களின்படி, 2023ஆம் ஆண்டின் இறுதியில், ஆண்டுக்கு குறிப்பிட்ட வருமானமுடைய பண்பாட்டு நிறுவனங்களின் மொத்த சொத்து 19 லட்சத்து 62 ஆயிரம் கோடி யுவானாகும். இது 2022ஆம் ஆண்டின் இறுதியில் இருந்ததை விட 7.6 விழுக்காடு அதிகரித்தது.

2023ஆம் ஆண்டு அணியக்கூடிய நுண்ணறிவு பண்பாட்டு சாதனத் தயாரிப்பு, டிஜிட்டல் வெளியீடு, பல்லூடக விளையாட்டு, கேலிச்சித்திரம் மற்றும் டிஜிட்டல் வெளியீட்டுக்கான மென்பொருள் வளர்ச்சி, இணைய தேடுதல் சேவை, பொழுதுபோக்கிற்கான நுண்ணறிவு ஆளில்லா விமானத் தயாரிப்பு, இணையம் தொடர்பான இதர தகவல் சேவை உள்ளிட்ட 6 கிளைத் துறைகளின் வருமானம் விரைவாக அதிகரித்து வருகிறது.