இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 62247 கோடி அமெரிக்க டாலராக அதிகரிப்பு
2024-02-10 17:01:45

பிப்ரவரி 2ஆம் நாள் முடிவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 573.6 கோடி அமெரிக்க டாலர்கள் அதிகரித்து 62247 கோடி டாலர்களாக இருந்தது என்று நாட்டின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்பின் மிகப்பெரிய அங்கமான அந்நிய செலாவணி சொத்துக்கள் 518.6 கோடி டாலர்கள் அதிகரித்து 55133.1 கோடி டாலர்களாக உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வாராந்திர தரவுகளின்படி, தங்கம் கையிருப்பு 60.8 கோடி டாலர்கள் அதிகரித்து 4808.8 கோடி  டாலர்களாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.