வசந்த விழா கலைநிகழ்ச்சியுடன் டிராகன் ஆண்டை வரவேற்கிறது
2024-02-10 00:05:44

பிப்ரவரி 9ஆம் நாள் இரவு 8மணிக்கு, சீன ஊடகக் குழுமத்தின் 2024ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சி உலக ரசிகர்களுக்கு வழங்கப்பட்டது. இது, உலகில் சீனப் பண்பாட்டை அறிந்து கொள்ளும் ஜன்னலாகத் திகழ்கின்றது.

டிராகன் ஆண்டுக்கான வசந்த விழா கலைநிகழ்ச்சி பெய்ஜிங்கில் நடைபெற்றது. அதேவேளையில், லியாவ் நிங், ஹுநன், ஷான்சி, சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் ஆகிய 4 இடங்களில், இந்த நிகழ்ச்சிக்கான அரங்குகள் அமைக்கப்பட்டன. பாடல், நடனம், குறுக்குப் பேச்சு, ஓபரா, குங்ஃபூ, மாயஜாலம், அக்ரோபாட்டிக்ஸ் உள்ளிட்ட பலவித நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. தவிர, இவ்வாண்டின் வசந்த விழா கலை நிகழ்ச்சியின் அரங்கில், மேலும் அதிகமான பொது மக்கள் கதாநாயகர்களாக பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.

உலகெங்கிலும் உள்ள 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 2100க்கும் மேற்பட்ட ஊடகங்கள், வசந்த விழா கலைநிகழ்ச்சியை நேரலையில் ஒளிபரப்பின. 49 நாடுகளைச் சேர்ந்த 90 நகரங்களில் உள்ள 3000க்கும் மேற்பட்ட பொது பெரிய திரைகளில், இந்த நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இதன்மூலம் உலகெங்கிலும் உள்ள மக்கள் சீன வசந்த விழா மற்றும் சீனப் பண்பாட்டின் தனித்துவமான அழகை பகிர்ந்து கொண்டனர்.