இலங்கையில் இருந்து தேயிலை இறக்குமதியை இரட்டிப்பாக்கும் ஈரான்
2024-02-11 17:06:17

ஈரானிய தேயிலை இறக்குமதியாளர்கள் தேயிலைக்கு எண்ணெய் பண்டமாற்று பொறிமுறையின் கீழ், இலங்கையில் இருந்து பெறும் தேயிலையின் அளவை, அதன் தற்போதைய 50 லட்சம் அமெரிக்க டாலர்களில் இருந்து 1 கோடியாக குளிர்கால மாதங்களில் இரட்டிப்பாக்க முன்மொழிந்துள்ளனர் என்று இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல்லின் கூற்றை மேற்கோள்காட்டி உள்ளூர் ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டன.

2023 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம், தேயிலைக்கு எண்ணெய் பண்டமாற்று பொறிமுறை துவங்கியதில் இருந்து, ஈரான் இலங்கையிடமிருந்து 2 கோடியே 50 லட்சம் டாலர் மதிப்பிலான தேயிலையை கொள்வனவு செய்துள்ளது என்றும் 48 மாதங்களில் 24  கோடி டாலர்களை செலுத்த இலங்கை உத்தேசித்துள்ளது என்றும் நிராஜ் டி மெல் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய அந்நிய செலாவணி பணப்புழக்க நெருக்கடிக்கு மத்தியில், தேயிலைக்கு எண்ணெய் பண்டமாற்று பொறிமுறையானது பெரும் வெற்றியடைந்துள்ளது என்றும், இது  இலங்கைக்கு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை வழங்கியுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.