பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கீழ் அவை தேர்தல் முடிவு வெளியீடு
2024-02-11 17:03:19

2024ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கீழ் அவை தேர்தல் முடிவு பிப்ரவரி 11ஆம் நாள் வெளியிடப்பட்டது.

வாக்கு பதிவின்படி, சுதந்திர வேட்பாளர்கள் குழு, 101 இருக்கைகளைப் பெற்று, முன்னணியில் இருக்கிறது. முஸ்லிம் லீக்கின் ஷெரிஃப் பிரிவு, 75 இருக்கைகளையும் மக்கள் கட்சி 54 இருக்கைகளையும் பெற்றுள்ளன. இதர கட்சிகள் பெற்ற இருக்கைகள் 50க்கு கீழ் உள்ளன. மொத்த இருக்கைகளில் 50 விழுக்காடு அதாவது 168 இருக்கைகளைப் பெற்ற கட்சி ஏதும் இடம்பெறவில்லை. இந்நிலையில் பல்வேறு தரப்புகள் கலந்தாய்வு மூலம் அரசாங்கத்தைக் கூட்டாக உருவாக்க வேண்டும்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் தற்போது 336 இருக்கைகள் உள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி காலம் 5 ஆண்டுகளாகும்.