லிங்கன் கல்விக்கூடத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஷி ச்சின்பிங் பதில் அட்டை
2024-02-11 15:48:09

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும், அவரது மனைவி பொங் லீயுவான்னும், பிப்ரவரி 11ஆம் நாள் அமெரிக்காவின் லிங்கன் கல்விக்கூடத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வசந்த விழாவுக்கான வாழ்த்து அட்டையைப் பதிலாக வழங்கினர். டிராகன் ஆண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, இக்கல்விக்கூடத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சீனாவில் பயணம் மேற்கொண்டு, இரு நாட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்களுக்கிடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்குப் பங்காற்றவும் அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

இதற்கு முன்பு, லிங்கன் கல்விக்கூடத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் பேராசிரியர் பொன் லீயுவான்னுக்கும் வசந்த விழாவுக்கான வாழ்த்து அட்டையை வழங்கி, சீன மக்களுக்குப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 100க்கும் மேலான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அட்டையில் பெயர்களைக் கையெழுத்திட்டனர்.