சீனாவின் தனியார் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான நடவடிக்கை
2024-02-12 19:19:50

தனியார் பொருளாதாரத்தின் வளர்ச்சி சூழலை மேம்படுத்தி, தனியார் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியில் ஏற்படும் இன்னல்களைத் தீர்த்து, வளர்ச்சி மீது தனியார் தொழில் நிறுவனங்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம், தொடர்புடைய தரப்புகளுடன் இணைந்து மேலதிக பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைமை செயலாளர் யுவான் டா கூறுகையில், தனியார் பொருளாதார முன்னேற்ற சட்டமியற்றல் போக்கினை விரைவுபடுத்தும் அதே வேளையில், தனியார் பொருளாதாரத்தின் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான கொள்கைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். தவிர, தனியார் தொழில் நிறுவனங்களுக்கான தகவல் வெளியீட்டு அமைப்பு முறையை மேம்படுத்தி, திட்டப்பணி தொடர்பான விளம்பரத்தை வலுப்படுத்தி, மேலதிக அரசு சாரா மூலதனம், நாட்டின் முக்கிய திட்டப்பணிகளின் கட்டுமானத்தில் பங்கெடுப்பதை ஊக்குவித்து ஈர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.