சிஜியாங் எண்ணெய் வயலில் 10 கோடி கன மீட்டர் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது
2024-02-12 19:18:53

சீன தேசிய கடல் எண்ணெய் தொழில் நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, முத்து ஆற்று வாயில் வடிநிலத்திலுள்ள சிஜியாங் எண்ணெய் வயலில் உற்பத்தி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் 10 கோடி கன மீட்டரைத் தாண்டியுள்ளது. இது சீனாவின் தென் பகுதி கடற்பரப்பில் மிக அதிக அளவு எண்ணெயை உற்பத்தி செய்யும் எண்ணெய் வயலாகும்.

இந்த எண்ணெய் வயலிலிருந்து ஷென்சென் தெற்கிழக்கிற்கு வருவதற்கு 150 முதல் 175 கிலோ மீட்டர் ஆகிறது. தற்போது, இது, கடலில் உற்பத்தி செய்யும் 6 வசதிகள் மற்றும் 300 உற்பத்தி கிணறுகளைக் கொண்டுள்ள எண்ணெய் வயல்கள் ஆகும்.

கடந்த சில ஆண்டுகளாக, உற்பத்தியை நிதானப்படுத்தும் வழிமுறைகளையும் உற்பத்தி அளவை உயர்த்தும் நடவடிக்கைகளை இந்த எண்ணெய் வயல் ஆக்கப்பூர்வமாக ஆராய்ந்து வருகிறது. இதன் மூலம், சீனாவின் கடல் எண்ணெய் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கு அரிய அனுபவங்கள் வழங்கப்பட்டுள்ளன.