ஈராக்-அமெரிக்கப் பேச்சுவார்த்தை மீண்டும் துவங்கியது
2024-02-12 16:23:16

ஈராக் ஆயுதப் படை முதன்மை தலைவரின் செய்தித் தொடர்பாளர் பிப்ரவரி 11ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் ஏற்பாட்டிலுள்ள சர்வதேச ஒன்றியமும், ஈராக்கும், உயர்நிலை ராணுவ விவகார ஆணையத்தின் கட்டுக்கோப்பின் கீழ் அதேநாள் 2வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தி, ஈராக்கில் சர்வதேச ஒன்றியத்தின் கடமையைக் குறைத்து அல்லது நிறுத்துவது பற்றி விவாதம் நடத்தின என்று தெரிவித்தார்.

ஈராக் தலைமையமைச்சரின் ஊடக அலுவலகம் ஜனவரி 27ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, ஈராக்கும் அமெரிக்காவும் அன்று முதலாவது பேச்சுவார்த்தை நடத்தி, ஈராக்கில் சர்வதேச ஒன்றியத்தின் கடமையை நிறுத்துவது குறித்து விவாதம் நடத்தின. பிப்ரவரி திங்கள் ஈராக்கின் மீது அமெரிக்கப் படை வான் தாக்குதல்களைத் தொடுப்பதன் காரணமாக, இப்பேச்சுவார்த்தை ஒரு காலத்தில் துண்டிக்கப்பட்டது.