சீனச் சுற்றுலா துறையின் வளர்ச்சி
2024-02-12 16:50:06

சீனா சுற்றுலா சங்கம் வெளியிட்ட தகவலின்படி, 2024ஆம் ஆண்டில் உள்நாட்டில் சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை 600 கோடியைத் தாண்டும் என்றும், எல்லை கடந்த சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை 26 கோடியைத் தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2023ஆம் ஆண்டு, சீனச் சுற்றுலா சந்தை மற்றும் சுற்றுலா தொழில் சங்கிலி குறிப்பிடத்தக்க அளவில் மீட்சியடைந்துள்ளது. உள்நாட்டில் சுற்றுலா பயணம் மேற்கொள்வோர்களின் எண்ணிக்கை மற்றும் வருமானம் 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 1 மடங்கு அதிகம். எல்லை கடந்த சுற்றுலா பயணம் மேற்கொள்வோர்களின் எண்ணிக்கை 19 கோடியைத் தாண்டி, 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 2.8 மடங்கிற்கு மேலாக அதிகரித்துள்ளது.