இலங்கைத் தொழிலாளர்கள் பணம் அனுப்புதல் 11.4 விழுக்காடு அதிகரிப்பு
2024-02-12 16:43:40

இலங்கைத் தொழிலாளர்கள் பணம் அனுப்புதல், 2023 ஆம் ஆண்டின் ஜனவரியில் இருந்ததை விட 2024 ஆம் ஆண்டின் ஜனவரியில் 11.4 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று இலங்கையின் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

X எனும் சமூக ஊடகத் தளத்தில், 2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தின் 43.75 கோடியுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டின் ஜனவரியில் பணியாளர்கள் அனுப்பிய தொகை 48.76 கோடி அமெரிக்க டாலர்களாக உள்ளது என்று நாணயக்கார கூறினார்.

இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரங்களின்படி, 2023ஆம் ஆண்டுக்கான தொழிலாளர்கள் அனுப்பிய தொகை 596 கோடி  டாலர்களாகும்.

சுற்றுலா மற்றும் தொழிலாளர்கள் பணம் அனுப்புதல், இலங்கையின் முதன்மையான வெளிநாட்டு வருமானம் ஈட்டும் துறைகளாகும்.