மத்திய கிழக்கு பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சி
2024-02-12 18:23:35

இவ்வாண்டு மத்திய கிழக்கு பிரதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் அதிகரிப்பு விகிதம், 2.9 விழுக்காட்டை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் ஜார்ஜீவா 12ஆம் நாள் தெரிவித்தார்.

அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் நடைபெற்ற உலக அரசாங்க உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அவர் கூறுகையில், உறுதியற்றத் தன்மை இருந்த போதிலும், உலகப் பொருளாதாரம் வளைந்து கொடுக்கும் தன்மையினால், உலகப் பொருளாதார எதிர்காலம் மீது சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை கொள்வதாக தெரிவித்தார். 2024ஆம் ஆண்டு உலகின் பண வீக்க விகிதம் குறையும் என்று மதிப்பிட்ட அவர், இடைக்கால உலகப் பொருளாதார அதிகரிப்பு விகிதம் சுமார் 3 விழுக்காட்டு அளவில் நிலைநிறுத்தப்பட்டு, வரலாற்றில் சராசரி நிலையான 3.8 விழுக்காட்டை விட குறையும் என்றும் சுட்டிக்காட்டினார்.